வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க கூட்டத்தில் ஏற்பட்ட சலப்பு உறுப்பினர்கள் பலர் கைது!! வெளியான காரணம்….
இன்றைய தினம் வவுனியா மாவட்டத்தில் இடம் பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கூட்டத்தின் போது ஏற்பட்ட சலசலப்பு காரணமாக பொலிஸாரினால் சுமார் தலைவி உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
மேலும் இக் கூட்டமானது வவுனியா நகர சபையின் இன்றைய தினம் இடம் பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சலசலப்பிற்குரிய காரணம் ஆவது;
வவுனியா மாவட்டத்தில் செயல்படுகின்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்திற்கு தற்போது புதிதாக நிர்வாக தேர்வு இடம் பெற்று இருப்பதாகவும் மற்றும் அதிலிருந்து ஒரு பகுதியினர் வெளியேறி இருப்பதன் காரணமாகவே முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
மற்றும் இன்றைய தினம் நடை பெற்ற கூட்டமானது அவ்வாறு வெளியேறியறிய உறுப்பினர்களுக்காக புதிய நிர்வாகத் தெரிவொன்றிலே வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் வவுனியாவில் இன்றைய தினம் கூட்டத்தில் நடத்தியுள்ளனர்.
இவ்வாறு வடக்கு கிழக்கில் இயங்கி வருகின்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் உறுப்பினர்களும் மற்றும் இப் புதிய நிர்வாகத் தெரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கும் இடையில் பெரிய வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் பின்னர் அது கை கலப்பாக உரு மாறியதாகவும் தெரிய வருகின்றது.
இதனை அடுத்து அவ் கூட்டத்தில் பங்கேற்ற சங்கத்தினர் உடனடியாக போலீசாறிற்க்கு தொடர்பினை மேற்கொண்டு தாக்குதல் குறித்து முறையிட்டுள்ளனர்.
இதனை அடுத்து உடனடியாக தலைவி உட்பட சுமார் 7 உறுப்பினர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மற்றும் வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைமையான யோகராசா கனகரஞ்சினி, மற்றும் குறித்த சங்கத்தின் செயலாளரான ஆனந்தன் நடராஜா,லீலாதேவி
மற்றும் முல்லை தீவு மாவட்டத் துணை சேர்ந்த சபிதா ராஸ்திரி மற்றும் உறுப்பினர்களான வவுனியா மாவட்டத்தினை சேர்ந்த சண்முகாசா சரோஜினிதேவி, சிவானந்தன் ஜெனிற்றா, செல்லத்துரை கமலா,பேரின்பராசா பாலேஸ்வரி ஆகியவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.