இலங்கையில் பல்வேறு பிரதேசங்களில் காணாமல் போன சிறுவர்கள்!! அதிர்ச்சி தரும் செய்திகள்…
இலங்கையில் பல்வேறு பிரதேசங்களில் சிறுவர்கள் காணாமல் போனதான தகவல்கள் தற்போது பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர் .
சுமார் 48 மணித்தியாலத்திற்குள் 5 சிறுவர்கள் உட்பட 11 நபர்கள் காணவில்லை என தற்போது நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் போலீஸ் தலைமையகத்திற்கு தகவல்கள் கிடைக்கப்பட்டுள்ளது ஆக தெரிகின்றது .
அவ் வகையில் தற்போது இரு சிறுமிகள் பாடசாலை சீருடை உடன் காணாமல் போய் உள்ளதான தகவல்கள் வெகுவாக பரவி வருகின்றது.
பிபில எனும் பிரதேசத்தில் உள்ள பெண்கள் இல்லத்தில் தங்கி கல்வி கற்று வந்த 16 வயது நிரம்பிய இரு சிறுவர்கள் கடந்த 3ம் திகதி பாடசாலைக்கு சென்று விட்டு பெண்கள் இல்லத்திற்கு மீண்டும் வருகை தராததினால் பெண்கள் இல்லத்தின் பாதுகாவலர் உடனடியாக பிபில போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மேலும் குறித்த இரு சிறுமிகள் பிபில பிரதேசத்திற்குற்பட்ட பாடசாலை ஒன்றிலே 11ம் வகுப்பு படித்து வருபவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இவர்கள் குறித்த போலீசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இரு சிறுமிகளும் பாடசாலை முடிந்த பின்னார் புத்தக பைகளுடன் பாடசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் அத்துரிகிரிய பிரதேசத்தில் உள்ள மெஹன்ய பௌத்த மடத்தில் கல்வி கற்கின்ற இரு பிக்குகளும் காணவில்லை என தெரியவந்துள்ளது.
இவர்கள் இருவரும் 14 மற்றும் 15 வயதுடைய இரு பிக்குகள் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இலங்கையில் பல்வேறு பிரதேசங்களில் காணாமல் போனோரின் விபரங்கள்….
இதனைத் தொடர்ந்து இலங்கையில் பல்வேறு பிரதேசங்களில் பலர் காணாமல் போயிருக்கின்றனர் அவ்வகையில் ;
வெலிமடை பிரதேசத்தில் 14 வயது நிரம்பிய பாடசாலை சிறுமி ஒருவர் காணாமல் போய் உள்ளதாக தெரியவந்துள்ளது.
அதனை அடுத்து பேராதனை வீதியைச் சேர்ந்த 23 வயதான ஹோட்டல் தொழிலாளியும் காணாமல் போய் உள்ளார் .
மற்றும் கிருலப்பனையை சேர்ந்த 41 சாரதி ஒருவரும் மற்றும் கந்தலாவையை சேர்ந்த 63 வயது நிரம்பிய நபர் ஒருவரும் மற்றும் எரகம பகுதியே சேர்ந்த 39 வயதுடைய நபர் ஒருவரும்,
இதனை அடுத்து தமிழர் பகுதியைச் சேர்ந்த யாழ்ப்பாணத்தில் செல்வநகர் பகுதியினைச் சேர்ந்த 25 வயது உடைய ஒருவர் மற்றும் கிளிநொச்சி பகுதியை சேர்ந்த 19 வயதுடைய யுவதி ஒருவரும் இவ்வாறு காணாமல் போனதாக தற்போது போலீஸ் தலைமையகத்திற்கு தகவல்கள் கிடைக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் பொலிஸார்.
இருப்பினும் இவர்கள் காணாமல் போனதற்குரிய காரணங்கள் ஒன்றாக இருக்குமா என பல்வேறு கோணங்களில் சம்பவம் குறித்தான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றது.
இச் சம்பவம் குறித்தான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு இலங்கையில் பல தரப்பட்ட நபர்கள் காணாமல் போய் உள்ள சம்பவமான தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருப்பதுடன்,
இது குறித்து மக்கள் அவதானத்துடன் செயல்படுமாறு போலீஸ் தலைமையகம் தற்போது தகவலினை வெளியிட்டுள்ளது.
மேலும் நாட்டின் பல பகுதிகளில் இவ்வாறு காணாமல் போனதான சம்பவங்கள் பல அரங்கேறி காணப்படுகின்றதாகவும் இதில் ஒரு சில விடயங்களே போலீசாருக்கு அறிவிக்கப்பட்டு அது குறித்தான விசாரணைகளை மேற் கொள்கின்றனர் எனவும் தெரியவந்துள்ளது.