வைத்தியசாலை ஊழியர்களின் அலட்சியத்தால் சிறுமியின் கை எடுக்கப்பட்டது தொடர்பாக யாழ் நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு…
யாழ் போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட எட்டு வயது சிறுமியின் கை அகற்றப்பட்டமை தொடர்பாக பெற்றோர் தரப்பினர் குறித்த வைத்தியசாலை ஊழியர்கள் மீது பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனை அடுத்து நேற்றைய தினம் குறித்த வழக்கு விசாரணையானது யாழ் நீதவான் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டது .
இதனை அடுத்து குறித்து எட்டு வயது சிறுமியின் துண்டிக்கப்பட்ட கையானது உடற்கூற்று ஆய்வுக்காக கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்க கோரி யாழ் நீதவான் நீதிமன்றம் தற்போது கட்டளையினை பிறப்பித்துள்ளது .
குறித்த சிறுமியின் இடது கையானது மணிக்கட்டு பகுதியிலிருந்து கீழாக அகற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் பெற்றோரின் முறைப்பாட்டுக்கு அமைய குறித்த துயர சம்பவமானது வைத்தியசாலை ஊழியர்களின் அலட்சியத்தினால் நடைபெற்றதாக வழக்கு பதிவு செய்திருந்தனர் .
மேலும் குறித்த துண்டிக்கப்பட்ட கை ஆனது உடற் கூற்று ஆய்விற்காக கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட முன்னணி நிபுணர் ஒருவரின் ஊடாக பரிசோதிக்க வேண்டும் என்கின்ற போலீசாரின் கோரிக்கை அமையவே நீதிமன்றத்தினால் இக் கட்டளை பிறப்பிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
மற்றும் இந்த வழக்கு எதிர்வரும் அக்டோபர் மாதம் 11-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு குறித்த சிறுமியின் துண்டிக்கப்பட்ட கையினை உடக்கூற்று ஆய்வு செய்வதன் மூலம் அத்துண்டிக்கப்பட்ட கையினை அகற்றுவதற்குரிய சரியான காரணத்தை அறிந்து உண்மையான குற்றவாளிகளை நீதமான நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக இவ் உடற்கூற்று ஆய்வு நடத்தப்படுகின்றதாகவும் தெரியவந்துள்ளது.
குறித்த சிறுமையானவர் தனது கை துண்டிக்கப்பட்ட பின்னர் முதன் முதலில் பாடசாலைக்கு செல்லும் போது பூச்செண்டுகள் கொடுத்து அச் சிறுமியை வரவேற்றிருந்தது பாடசாலை சமூகம் என்பது குறிப்பிடத்தக்கது