மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கை மக்களுக்கு புது வீடுகள்!! மகிழ்ச்சியில் இலங்கையர்கள்…..
இந்திய நாட்டின் தமிழகப் பகுதியில் போரின் காரணமாக இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் சுமார் 29 மாவட்டங்களில் அமைந்துள்ள மறுவாழ்வு முகாம்களில் தற்போது வரை வாசித்து வருகின்றனர்.
மேலும் இவர்களுக்கு தமிழக அரசானது குறித்த முகாம்களில் வீடுகள் மற்றும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்திருந்தது.
இருப்பினும் தற்போது மறுவாழ்வு முகாம்களின் உபயோகிக்கப்பட முடியாத வீடுகளாக காணப்படுகின்ற வீடுகளிற்கு பதிலாக புதிதாக வீடுகள் கட்டப்பட்டு வந்துள்ளது .
அதில் சுமார் 1591 வீடுகளை வழங்கும் விழாவானது தற்போது தமிழக முதல்வரான மு க ஸ்டாலின் அவர்களின் தலைமையில் இடம்பெற்றிருக்கின்றது.
மேலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் வேலூரில் உள்ள வேல்மனூர் என்னும் இலங்கை தமிழ் அகதிகள் முகாமிலே இந்த நிகழ்வு இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு புது வீடுகளை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு வழங்கி இலங்கை அகதிகள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார் உள்ளார் முதல்வரான மு .க . ஸ்டாலின் அவர்கள் .
இவ் வீடுகள் கட்டுவதற்குரிய செலவானது சுமார் இந்திய மதிப்பில் 79.70 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இது இலங்கை ரூபாய் சுமார் 300 கோடி பெறுமதி மிக்கது எனவும் தெரியவந்துள்ளது.
போரின் நிமித்தம் தங்களது உயிர்களை காப்பாற்றும் நோக்கில் உடைமைகள், சொத்துக்கள் என பலவற்றை இலங்கையிலே விட்டுவிட்டு அகதிகளாக பல வருடங்கள் இந்தியாவின் தமிழக பகுதியில் வாழ்ந்து வரும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய அரசானது அனேக நற்செயல்களை அன்றிலிருந்து இருந்து இன்று வரை செய்து கொண்டு தான் இருக்கிறது என்று கூறினால் அது மிகையாகாது.
அந்த வகையில் இலங்கையிலிருந்து இந்திய மறுவாழ்வு முகாம்களில் சுமார் 29 மாவட்டங்களில் சுமார் 104 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்கள் காணப்படுகின்றன.
இவர்களுக்காக சுமார் 7469 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றது .இதில் சுமார் 3510 வீடுகள் முதற்கட்டமாக கட்டப்பட்டுள்ளன .
அதில் 1591 வீடுகள் தற்போது வரை முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் அவ்விழாவில் உரையாற்றும் போது தெரிவித்து இருந்தார்.
இலங்கையின் சகோதர நாடான இந்தியா எப்போதும் இலங்கை தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் பரந்த உள்ளம் கொண்ட அரசாங்கமாகவே திகழ்கிறது.
இந்த நிகழ்வுகளினால் மறுவாழ்வு முகாம்களிலே வாழ்கின்ற இலங்கை தமிழர்கள் இது குறித்து மகிழ்ச்சியில் அடைந்துள்ளனர் .
இலங்கையில் இருந்து அகதிகளாக இந்தியாவில் வசித்து வருகின்ற இலங்கை குடியுரிமை கொண்ட அகதிகளாக மறுவாழ்வு முகாம்களில் வாசிக்கின்றவர்களுக்கு இந்திய அரசானது பல்வேறு விதமான சலுகைகளை செய்து வருகின்றது.
அவ் வகையில் அவர்களுக்கு மாதம் மாதம் சம்பளமாக குறிப்பிட்ட தொகையையும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத் தக்க ஒரு விடயம் ஆகும்.
மேலும் இந்திய மறுவாழ்வு முகாம்களில் பல வருடங்களாக வாழ்ந்து வந்து கொண்டிருக்கும் இலங்கையர்கள் தற்போது அதிகமான வெற்றி இலக்குகளையும் அடைந்த வண்ணம் இருக்கின்றனர்.
அந்த வகையில் அங்கு கல்வி பயிலும் பல மாணவர்கள் தங்களது திறமைகளை அவ்வப்போது வெளிக்கொணர்ந்தவாறு இருக்கின்றனர்.
அவ்வாறான பல செய்திகளையும் இந்திய ஊடகங்களில் காணக்கூடியவாறு இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.