135 பவுன் நகைகள் களவு… யாழில் நடந்தேறிய சம்பவம்!!
யாழ்ப்பாணத்தின் இன்னுவில் பகுதியில் 135 பவுன் தங்க நகைகள் காணாமல் போய் உள்ளதாக தற்போது போலீசாருக்கு முறைப்பாடு கிடைக்க பெற்றுள்ளது.
இந் நிலையில் குறித்த காணாமல் போன நகைகள் அடங்கிய வீடானது கோப்பாய் போலீஸ் பிரிவிற்கு உட்பட்ட வீடு என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.
மற்றும் இத் திருட்டுச் சம்பவமானது இன்றைய தினமே இடம் பெற்றுள்ளது.
இன்றைய தினம் குறித்த வீட்டில் தினம் அந்தியேட்டி கிரியை நடைபெற இருந்த நிலையில் குறித்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மற்றும் குறித்த குறித்த நிகழ்வுக்காக குடும்பத்தார்கள் சுமார் அதிகாலை 3 மணி அளவில் எழுந்த போது குடும்பத்தினர் ஒருவரின் கையடக்க தொலைபேசி ஒன்றினை காணவில்லை என்று அதனைத் தேடிய பொழுதே நகைகள் வைக்கப்பட்டிருந்த அலுமாரியும் மற்றும் குறித்த அறையின் கதவும் திறந்த நிலையில் காணப்பட்டதாகவும்,
இதன் பின்னரே குறித்த நகைகளை பரிசோதித்த போது 135 பவுன் தங்க நகைகள் காணாமல் போய் உள்ளதாக குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தத நிலையில் உடனடியாக போலீசாருக்கு குறித்த திருட்டு சம்பவம் தொடர்பாக அறிவித்துள்ளனர் குடும்பத்தினர்.
இதனை அடுத்து போலீஸ் பிரிவினரும் குறித்த திருடு போன நகைகளை மீட்டெடுக்கும் விசாரணைகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
குறித்த குடும்பத்துடன் தொடர்புடைய நபர் ஒருவரோ அல்லது ரகசியமாக நுழைந்த நபர் ஒருவரினாலே திருட்டு சம்பவம் இடம்பெற்று இருக்கலாம் என போலீசார் தற்போது சந்தேகித்து வருகின்றனர்.
மற்றும் குறித்த திருட்டு சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவும் போலீஸ் பிரிவும் ஆரம்பகட்ட விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.