கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் பாகிஸ்தானில் சம்பவம்
பாகிஸ்தான் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் கடந்த புதன் கிழமை அன்று கிறிஸ்தவ தேவ ஆலயங்களை கிறிஸ்தவர்களுக்கு எதிரான ஒரு கும்பல் தீ வைத்து எரித்து உள்ளது.
இதில் குறைந்தது 17 தேவாலயங்கள் தீ வைத்தது ஆகவும் அதனை சேதப்படுத்தி உள்ளதாகவும் பாகிஸ்தானின் உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
மேலும் இதற்கான காரணத்தை ஆராயும் போது குர்ஆனை அவமதித்ததாகவும் அவதூறு செய்வதாகவும் ஒரு கிறிஸ்தவ இளைஞன் மீது குற்றம் சாட்டப்பட்டது .
இச் சம்பவத்தை வன்மையாக கண்டித்து இவ்வாறு 17 கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்குதல்களுக்கு உட் படுத்தப் பட்டு உள்ளது .
மேலும் இது குறித்த ஆராய்கையில் குறிப்பிட்ட சேதமாக்கப்பட்ட ஆலயங்களில் 12 தேவாலயங்கள் பதிவு செய்யப்பட்ட தேவாலயங்களாகவும் ஐந்து தேவாலயங்கள் சிறிய பதிவு செய்யாத தேவாலயங்களாகவும் காணப்படுகின்றன .
மேலும் பாகிஸ்தான் நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு கடுமையான நிபந்தனைச் சட்டங்கள் வகுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் சிறுபான்மை இனமான கிறிஸ்தவ இனத்திற்கு மேலும் மேலும் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும் இச் சம்பவத்தில் தாக்கப் பட்ட நகரை சுற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குழுவாகத் திரண்டு தேவாலயங்களை தாக்கினர் எனவும் தகவல்கள் கிடைத்து உள்ளன. இருப்பினும் காவல்துறையினர் தாக்குதலை தடுத்தும் உள்ளனர்.
மேலும் அமைதி நிலவுவதற்காகவும் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காகவும் ஏராளமான போலீசார் தாக்குதல் நடைபெற்ற நகரை சுற்றி குவிக்கப்பட்டனர்.
மேலும் இவ் வகையான கால்புணர்ச்சி சம்பவம் குறித்து உண்மையில் நீதி வழங்க வேண்டும் எனவும்.
இதனை மனித உரிமைகள் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவலாக பரவுகின்றன.