பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களினால் தாக்கப்பட்ட நபர்…. யாழ் போதன வைத்தியசாலையில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம்…
இலங்கையின் வட மாகாணமான யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள அரச வைத்தியசாலையான யாழ் போதனா வைத்தியசாலையில் மனிதாபிமானம் அற்ற செயலொன்று கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது தற்போது அதிக கேள்விகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் குறித்த வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் இருவர் இணைந்து குறித்த நபர் ஒருவரை தாக்கியுள்ளனர்.
மேலும் இதனை அறிந்த வைத்தியசாலை வட்டாரம் உடனடியாக குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இனிவரும் காலங்களில் இவர்கள் இருவரும் குறித்த வேலைக்கு அமர்த்தப்பட மாட்டார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் யாழ் போதனை வைத்தியசாலை இன் பாதுகாப்பினை தனியார் நிறுவனமே கண்காணித்து வருவதாகவும் அதன் ஊழியர்களை இவ்வாறான செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
உடனடியாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை இன் உயர் அதிகாரி குறித்த தனியார் நிறுவனத்திற்கு இது குறித்து எழுத்து மூலமாக கடிதத்தினை வழங்கி மற்றும் குறித்த இரு பாதுகாப்புஉத்தியோகஸ்தர்களையும் எச்சரித்தும் இருக்கின்றார்.
மற்றும் இதனை அடுத்து குறித்த இரு பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களிடமும் இது குறித்த வினவிய போது குறித்த வைத்தியசாலையினுள் நுழைய முற்பட்ட நபர் ஆனவர் குடிபோதையில் இருந்ததாகவும் மற்றும் அநாகரீக விடயங்களில் ஈடுபட்டதாகவும்,
அதுமட்டும் இன்றி அத்துமீறி வைத்தியசாலைக்குள் நுழைந்ததாகவும் இதனாலேயே இருவரும் (பாதுகாப்புஉத்தியோகஸ்தர்கள்) குறித்த நபரை தாக்கியதாக இருவரும் கூறியுள்ளனர்.
இருப்பினும் குறித்த சம்பவம் மக்களை சுதந்திரமாக வைத்தியசாலையில் நடமாட விடாது எனக் கூறி இரு உத்தியோகஸ்தர்களும் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர் எனவும் குறித்து வைத்தியசாலையின் உயர் அதிகாரி அவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.