ஈஸ்டர் தாக்குதல் போன்று மற்றுமொரு குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழும் என இளங்கையில் அபாய எச்சரிக்கை !!!
ஈஸ்டர் தின தாக்குதலை தொடர்ந்து அவ்வாறான தாக்குதலைப் போன்று இலங்கையில் இந்த தேர்தல் காலங்களில் ஆங்காங்கே குண்டு வெடிப்பு சம்பவங்கள் அரங்கேறலாம் என அரசியல் கைதிகள் விடுதலை செய்வதற்கான அமைப்பின் தேசிய இணைப்பாளரான சக்திவேல் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த குண்டு வெடிப்பானது முக்கிய நோக்கமாக பௌத்தர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே முரண்பாடுகளை உண்டுபடும் வகையில் அமையும் எனவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
ஈஸ்டர் தின குண்டு வெடிப்புச் சம்பவமானது இலங்கை நாட்டையே உலுக்கிய சம்பவம் ஆகவும் காணப்பட்டது .
மேலும் அது தொடர்பான விளைவுகள் தற்போது வரை மக்களிடையே காணப்பட்டும் இருகிறது .
மற்றும் தற்போது இது தொடர்பான சேனல்4 இன் ஆவணப்படுத்தலானது தற்போது பல அரசியல்வாதிகளையும் சந்தேகப்படுத்தும் நோக்கில் செய்திகள் வெளியாகி இருந்தது.
இந் நிலையில் இது போன்ற கருத்துக்களினால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
அரசியலாபங்களுக்காகவும் , அரசியலில் தங்களை நிலை நிறுத்திக் கொள்வதற்காவும் ஏற்படுத்தப்படுகின்ற இவ்வாறான சதி விளையாட்டுகளில் சிக்கி தவிப்பவர்கள் உண்மையில் மக்கள் எனக் கூறினால் அது மிகையாகாது.
பொதுமக்களை காப்பதற்காகவும் மற்றும் நல்லாட்சி புரிவதற்காக தான் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன,
இருப்பினும் இலங்கையில் இதனை மறந்து அடக்குமுறைகள் பலவற்றின் ஊடாக தலைவர்கள் ஆகின்ற செய்தியானது தற்போது வெகுவான விமர்சனங்களை பெற்று வருகின்றது.
இலங்கையில் ஏற்படுகின்ற இவ்வாறான சம்பவங்களினால் இலங்கை மக்கள் மதங்கள் ரீதியாக தங்களுக்குள் முரண்பாடுகளை வளர்த்துக் கொள்வதும் மற்றும் எதிரியாக தங்களுக்குள்ளே அடித்துக் கொள்வதுமான சம்பவங்கள் ஏற்படுகின்றன .
இவ்வாறான சம்பவங்கள் அனைத்தும் உண்மையில் தேர்தல் நோக்கிலானது என்பது என்பதினால் பொதுமக்கள் அனைவரும் இனிவரும் காலங்களில் சற்று சிந்தித்து நடந்து கொள்ள வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.