யாழில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி குறித்து வெளியிடப்பட்ட திடுக்கிடும் தகவல்!!!அம்பலமான உண்மை..
மூன்று நாட்களுக்கு முன்னதாக சிறுமியொருவர் யாழில் சடலமாக மீட்க்கப்பட்டிருந்தார் .
குறித்த சடலம் யாழில் தனியார் விடுதி ஒன்றில் இருந்து மீட்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது .
சிறுமியின் வழக்கு தொடர்பான உண்மை தகவல் தற்போது வெளியாகி உள்ளது. குறித்த சிறுமியானவர் சிறுவயதிலிருந்து இருந்து தனது அம்மம்மாவின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார்.
குறித்த சிறுமியின் அம்மாவும் அப்பாவும் பிரிந்து இருவரும் தனித்தனியே வேறு திருமண வாழ்க்கையினை வாழ்ந்து கொண்டு வந்திருக்கின்றனர்.
இந் நிலையில் அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்த குறித்த சிறுமியை தகப்பன் தான் வளர்ப்பதாக கூறி கூட்டிச் சென்றுள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான அம்மம்மா ஆனவர் குறித்த சிறுமியின் எதிர்காலம் குறித்து கவலை கொண்டுள்ளார்.
இதனால் தகப்பனிடமிருந்து ஒரு கிழமை தான் வைத்துப் பார்ப்பதாக கூறி கூட்டி வந்த அம்மம்மா யாழ்ப்பாண தனியார் விடுதியில் தங்கி இருக்கிறார்.
யாழில் சடலமாக மீட்க்கப்பட சிறுமியின் பாட்டி கொடுத்த வாக்குமூலம்….
சிறுமியின் எதிர்காலம் கேள்விக்குறியாக போய்விடுமோ என எண்ணி சிறுமியும் தானும் இறந்தது விட வேண்டும் திட்டமாயிட்டுள்ளார் .
இதனால் சிறுமிக்கு தூக்க மாத்திரை கொடுத்து உறங்க சொல்லிவிட்டு பின்னர் விச ஊசியின் மூலம் சிறுமியை கொலை செய்துள்ளார் குறித்த அம்மம்மா .
சிறுமியை கொன்ற பிறகு தானும் தூக்க மாத்திரைகள் அருந்தி ஊசியையும் ஏற்றி உள்ளார்.
ஆயினும் பாட்டி உயிர் பிழைத்து சுயநினைவின்றி விடுதியில் இருந்து மீட்கப்பட்டார்.
பின்னர் சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் போலீசாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டு இருந்தார்.
சுயநினைவு பெற்று பாட்டி அவர்கள் இன்றைய தினம் போலீசாரிடம் குறித்த சம்பவத்தினை தெளிவுபடுத்தியுள்ளார் .
மேலும் குறித்த கொலை செய்த பாட்டியானவர் ஆரம்பத்தில் காதியாக கடமை புரிந்த நிலையில் அவரது தாதியார் அடையாள அட்டையினை வைத்து பாமசியிலிருந்து குறித்த விசா ஊசியினையும் ,மருந்தினையும் மற்றும் அதிக தூக்க மாத்திரையின் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டு இருந்தார் .
சிறுமியை ஆரம்பத்தில் தூக்க மாத்திரைகளை கொடுத்து உறங்கச் சொல்லிவிட்டு பின்னர் விச ஊசியை உடலினுள் செலுத்தி உள்ளார் .
பின்னர் தானும் மாத்திரை மற்றும் ஊசியினை போட்டுக் கொண்டுள்ளார் என குறிப்பிட்டிருந்தார் .
இதனை அடுத்து பொலிஸார் உரிமையாளருடன் விசாரணை நடத்திய போது இரண்டு தினங்களுக்கு முன்னர் பாட்டியும் அவருடன் சிறுமியும் வந்ததாகவும் இருவரும் அறையினை பதிவு செய்துவிட்டு ஒரு தடவை மாத்திரம் வெளியில் சென்று வந்ததாகவும் பின்னர் அவ் அறை பூட்டியே இருந்ததாகவும் தெரிவித்தனர்.
மேலும் இரண்டு நாட்களுக்கு பின் தனியார் விடுதியின் ஊழியர் ஒருவர் அறையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக நிர்வாகத்திடம் அறிவித்ததை அடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .
அதன் பின்னரே போலீசாரின் உதவியுடன் அறை திறக்கப்பட்டது .
அதன் பின்னரே கட்டிலில் சிறுமி உயிர் இழந்திருப்பது கண்டு கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் அருகாமையில் இருந்த கட்டிலில் பாட்டி அவர்கள் சுயநினைவின்றி இருப்பதையும் அறிந்து உடனடியாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதன் போது அறையினை சோதனை செய்த போலீசார் பாட்டின் மூலம் எழுதப்பட்ட கடிதம் ஒன்றிணையும் எடுத்துள்ளார்கள்.
அதில் தங்களது இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை என எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது .