தரமற்ற ஊசிகளை இறக்குமதி செய்தது தொடர்பில் கைதான முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர்…. வெளியான விரிவான செய்திகள்….
சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளராக அங்கம் வகித்து வந்த ஜனக ஸ்ரீ சந்திரகுப்த என்பவர் நாட்டில் தரமற்ற ஊசிகளை இறக்குமதி செய்தது தொடர்பாக தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இவர் இலங்கையின் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மற்றும் இவரிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையிலே இவர் குற்றப் புலனாய்வு பிரிவினரினால் கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
இதனை அடுத்து குறித்த தரமற்ற இமினோகுளோபின் ஊசிகளை இறக்குமதி செய்த குற்றம் தொடர்பிலான விசாரணையின் போது மருத்துவ பிரிவின் பணிப்பாளர் உட்பட மேலும் அனேக அதிகாரிகள் தற்போது வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் ஆரம்பத்தில் குற்ற புலனாய்வு பிரிவினரால் கைதான இது தொடர்பில் கைதான நபர்கள் கீழ் மட்டத்தில் இருப்பவர்கள் என பல்வேறு விதமான சர்ச்சைக்குரிய தகவலினை சுகாதார தொழிற்சங்கம் குறிப்பிட்டு தங்களுடைய கவலைகளையும் தெரிவித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந் நிலையிலே தற்போது முன்னாள் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் இது தொடர்பில் கைதாகி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.