வைத்தியத்துறையில் தரமற்ற ஊசி!!! முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…
தற்போது இலங்கையின் வைத்தியத்துறையில் தரமற்ற ஊசிகள் இறக்குமதி தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கலமானது கைது செய்த ஊழியர்களில் முதல் கட்டத்தில் கீழ் மட்டத்தில் காணப்படுபவர்களை கைது செய்துள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தற்போது குற்றம் சாட்டியுள்ளனர்.
மற்றும் ஊழல் தொடர்பில் வைத்தியத்துறையில் தரமற்ற ஊசிகளை இறக்குமதி செய்ய முன்னாள் அமைச்சரும் மற்றும் சுகாதார செயலாளர் மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையர் , ஆணையத்தின் அதிகாரிகளும் ஆகிய முக்கிய பிரமுகர்களை விட்டுவிட்டு கீழ் மட்டத்தில் காணப்படுகின்ற சாதாரண ஊழியர்களை கைது செய்துள்ளதாகவும்.
மற்றும் இது போன்ற முக்கிய பிரமுகர்களை நிராகரிக்க முடியாது என்றும் தற்போது தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி உள்ளது.
எனவே இது தொடர்பில் இக் குற்றம் தொடர்பில் முக்கியமாக செயல்பட்ட உயர் மட்டத்தில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் மற்றும் இந்த ஊழல் குற்றச்சாட்டு காரணமாக செயல்பட்ட உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் சுகாதார தொழிற்சங்கம் ஆனது தற்போது போலீசாருக்கும் குற்ற புலனாய்வு போலீஸாருக்கும் வலியுறுத்தி இருக்கின்றது.
மற்றும் இவ் ஊசி இறக்குமதி தொடர்பான சம்பவத்தில் தற்போது புதிய அமைச்சரும் ஒருவர் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இதன் போது சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்து இருக்கின்றார்.
இது தொடர்பில் தெரிவிக்கையில் முன்னதாக வைத்தியத்துறையில் தரமற்ற இமினோக்ளோபின் ஊசிகள் தொடர்பான ஊழல் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரனையில் அரச மருத்துவ வளங்கள் பிரிவின் பணிப்பாளர் உட்பட பல அதிகாரிகள் தற்போது வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணை செய்து வருகின்றதும் குறிப்பிடத்தக்கது.
அதே போல் இது போன்ற தரமற்ற இமினோக்ளோபின் ஊழல் தொடர்பில் சம்பந்தப்பட்டுள்ள முக்கிய பிரமுகர் கைது செய்யப்பட்டு தக்க தண்டனை வழங்கும் இடத்தில் இது போன்ற காரியங்களை செய்யும் நபர்களுக்கு நல்ல படிப்பினையாக அமையும் எனவும் பலர் தங்களது கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.