சட்ட விரோதமாக புலம் பெயரும் இலங்கையருக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை…
தற்போது உலக நாடுகளில் நடைபெறுகின்ற யுத்த சூழ்நிலைகளை ஏதுவாக பயன்படுத்தி சட்ட விரோதமாக புலம்பெயரும் இலங்கை பிரஜைகளை பயங்கரவாதிகளாக கருதி சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும் எனவும் இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் தற்போது தகவலினை வெளியிட்டுள்ளார் .
மேலும் குறிப்பாக இஸ்ரேல் நாட்டிலே இவ்வாறு சட்ட விரோதமாக உள்நுழைபவர்களுக்கு என யாரும் இஸ்ரேல் நாட்டில் யாரும் முன்னிலையாக மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டு இருக்கின்றார்.
சட்டவிரோதமாக ஒரு நாட்டின் எல்லையில் இருந்து வேறொரு நாட்டின் எல்லைக்கு புலம் பெயர்வது மிகவும் ஆபத்தானது எனவும் அது தவறான நடவடிக்கை என்றும் அவர் வலியுறுத்தி இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் கடந்த அக்டோபர் மாதம் ஏழாம் தேதி அன்று இலங்கையினை சேர்ந்த இலங்கை பிரஜையாகிய இரண்டு பெண்கள் யோர்தான் எல்லையில் இருந்து இஸ்ரேல் எல்லையை கடக்க முயற்சி செய்த போது இஸ்ரேல் நாட்டு அதிகாரிகளினால் குறித்து இரு பெண்களும் கைது செய்யப்பட்டிருந்த தகவல்கள் வெளியாக இருந்தது .
இந் நிலையில் தற்போது குறித்து இரண்டு பெண்களும் மீண்டும் ஜோர்தானிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மற்றும் குறித்து இரு பெண்கள் மீதும் தக்க சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்து இருக்கின்றார்.
மற்றும் இவ்வாறு சட்ட விரோதமாக புலம்பெயருகின்ற மற்றும் நாடு கடத்தப்பட உள்ள இலங்கையர்கள் தொடர்பில் எந்த ஒரு சூழ்நிலையிலும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகமானது தலையிடாது எனவும் அவர் குறிப்பிட்டு இருக்கின்றார்.
எவ்வாராயினும் பாதுகாப்பான நம்பகத்தன்மையான முறைகளின் ஊடாகவே இவ்வாறான பயணங்களை மேற்கொள்ள வேண்டும்.
இருப்பினும் அதிகமான இலங்கையர்கள் சட்டவிரோதமாகவே இன்னுமொரு நாட்டினுள் புலம்பெயர்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.