அன்றாடம் உபயோகப்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு…
இலங்கையில் அன்றாடம் உபயோகப்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலையினை தற்போது இலங்கையின் சதோச நிறுவனம் குறித்து புதிய விலைகளினை நிர்ணயித்து உள்ளது .
அவ் வகையில் சுமார் ஐந்து அன்றாடம் உபயோகப்படுத்தும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலையானது தற்போது குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த விலை குறைப்பானது நாளைய தினம் 19 10 2023 ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் எனவும் சதோச நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன் படி இறக்குமதி செய்யப்பட்டுள்ள 425 கிராம் எடையுள்ள டின் மீன் ஆனது 35 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் அதன் புதிய விலையாக 650 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மற்றும் 425 கிராம் எடை கொண்டுள்ள உள்ளூரில் உற்பத்தி செய்கின்ற டின் மீன் ஆனது 5 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலையாக 545 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மற்றும் ஒரு கிலோ பாசிப்பயரானது 20 இனால் குறைக்கப்பட்டு அதனது புதிய விலையாக கிலோ ஒன்றுக்கு 1100 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து நெத்திலியின் விலையானது 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலையாக 1090 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொத்தமல்லி ஒரு கிராமின் விலை இவ்வாறு பத்து ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.
மற்றும் அதன் புதிய விலையானது 540 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.