Srilanka News

கொழும்பில் வெடிக்கவுள்ள பாரிய போராட்டம்… தயாரான போராட்டக்காரர்கள்!!

இலங்கையின் கொழும்பில் பாரிய போராட்டம் ஒன்று இடம் பெற இருப்பதற்குரிய செய்திகள் தற்போது வெளியாக இருக்கின்றன.

ஆசியர் சேவை சங்கமே இவ்வாறு போராட்டத்தினை முன்னெடுக்க உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கின்றது .

அரசாங்க அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சம்பல நிலுவையினை கோரி குறித்த போராட்டமானது இடம் பெற இருக்கின்றது.

இந்த மாதம் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி கொழும்பில் அமைந்துள்ள மத்திய கல்வி அமைச்சுக்கு முன்னால் இப் போராட்டம் இடம்பெறக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்து போராட்டத்திற்கான அழைப்பினை ஆசிரியர் சேவை சங்கத்தின் யாழ் மாவட்ட செயலாளர் அவர்களே விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவர் இவ்வாறு கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் தெரிவிக்கையில் ஆசிரியர் மற்றும் அதிபர்களுக்கான சம்பள நிலுவை தொடர்பில் அரசாங்கத்துடன் பல்வேறு விதமான சந்தர்ப்பங்களில் முறைப்பாடுகளும் மற்றும் பேச்சுவார்த்தைகளும் நடத்தி இருப்பதாக இருப்பினும் அது குறித்து எவ்விதமான முடிவுகளும் எடுக்கப்படவில்லை என்பதினால் தற்போது போராட்டத்தில் களமிறங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டு இருக்கின்றார்.

மேலும் நாட்டிலே ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையின் காரணமாகவே அரசாங்கமானது இவ்வாறு அரச வேலைகளில் இருக்கும் நபர்களின் சம்பளத்தினை நிலுவையிலே வைத்ததாகவும் தெரியவந்துள்ளது.

Related Articles

Back to top button