வெளிநாட்டு வேலை வாய்ப்பு என கூறிய ஏமாற்றிய பெண் கைது!!
இலங்கையில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு என பல்வேறு விதமான மற்றும் பல்வேறு தரப்பினர்கள் போலியான மோசடி செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சவூதி மற்றும் துபாய் ஆகிய வெளிநாடுகளில் வேலை பெற்று தருவதாக கூறி மோசடி செய்த ஒரு பெண்னொருவர் வெளிநாட்டு தூதரகத்தினால் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தற்போது இலங்கை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த பெண்ணானவர் ருமேனியாவில் வேலை பெற்று தருவதாக கூறி சுமார் ஒன்பது லட்சம் ரூபாவினையும் மற்றும் துபாயில் வேலை பெற்று தருவதாக கூறி ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாவினையும் மோசடி செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.
மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்ணானவர் கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளார்.
இவ்வாறு குறித்த பெண்ணின் மோசடிக்கு இலக்கான இரண்டு பேரின் முறைப்பாடுகளுக்கு அமையவே குறித்த பெண்ணானவர் வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரியின் உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளார் .
வேலைவாய்ப்பு பணியாகத்தின் அதிகாரிகள் தெரிவித்த பெண் குறித்த தகவல்களின் அடிப்படையில் அப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இவருக்கு வெளிநாட்டிற்குரிய வேலையினை பெற்றுக் கொடுப்பதற்கு உரிய எவ்வித அனுமதி பத்திரமும் வழங்கப்படவில்லை என்பதும் குறித்த விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
இவ்வாறு பல்வேறு விதமான மோசடி சம்பவங்கள் இலங்கையில் தற்போது அரங்கேறி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர் .
இதனால் பொதுமக்கள் இது குறித்தது சற்று விழிப்பாக இருக்கக் கூறி போலீசாரினாள் வேண்டுகோள் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாடு செல்வதற்கு முன் வேலைவாய்ப்பு பணியகத்தினால் பதிவு செய்யப்பட்ட மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த ஏஜென்சி மூலமாக செல்வதற்கு உரிய முயற்சிகளை செய்ய வேண்டும் எனவும்,
மற்றும் எவ்வித அதிகாரப்பூர்வ ஆதாரங்களும் இன்றி யாரிடமும் வெளிநாடு செல்வதற்கான பணங்களை கொடுத்து ஏமாந்து விடாதீர்கள் எனவும் பொதுமக்களை எச்சரித்துள்ளனர் பொலிஸ் தரப்பினர் .