World

பயங்கரவாத தாக்குதலினால் நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பலி!!

சோமாலியாவில் அல்-ஷபாப் எனும் பயங்கரவாத அமைப்பினரினால் ஏற்படுத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் மூலமே சுமார் 167 ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர்.

இந்த பயங்கரவாத அமைப்பினர் அரசாங்கத்துக்கு எதிராகவே இத் தாக்குதலினை நடத்தியுள்ளனர் என தெரியவருகின்றது .

மேலும் இவர்கள் அரசாங்கத்தினை தாக்குவதற்காக பதுங்கி இருந்து இரண்டு பெரிய ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இவ்பயங்கரவாத அமைப்பினரை கட்டுக்கோப்பில் கொண்டு வருவதெற்கென அரசாங்கமானது பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற இந் நிலையிலே இப் அல்-ஷபாப்பயங்கரவாத தாக்குதல் சோமாலியாவில் நடைபெற்றுள்ளது.

பயங்கரவாதஅமைப்பினரினை ஒடுக்குவதற்கு என சோமாலியாவின் அண்டைய நாடுகளான எத்தியோப்பியா மற்றும் உகாண்டா தங்களது ராணுவத்தினை சோமாலியாவிற்கு துணையாக அனுப்பி உள்ளது .

அந்த வகையில் சோமாலியாவின் மேற்பகுதி நகரங்களில் குறிப்பிட்ட அல்-ஷபாப் அமைப்புகள் முகாமிட்டு தங்கி இருப்பதாகவும் உளவுத்துறை தகவல் ஒன்றினை வழங்கியுள்ளது.

மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று காலையில் ஏற்பட்ட தாக்குதலின் போது பயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இதன் போது 167 எத்தியோப்பிய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது .

Related Articles

Back to top button