World

அமெரிக்கா மற்றும் கனடா சூறாவளியால் பாதிக்கப்படலாம் என முன்எச்சரிக்கை!! மக்களை பாதுகாப்பாக இருக்க கோரி விடுக்கப்பட்ட அறிவித்தல்….

கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் எதிர்வரும் வாரங்களில் பாரிய சூறாவளி ஏற்படலாம் என எதிர்வு கூறல்களை தற்போது முன்னறிவிப்பாளர்கள் முன்னறிவித்து இருக்கின்றனர் .

அட்லாண்டிக் பெருங்கடலிலே தற்போது வீசும் பாரிய சூறாவளி ஆனது நகர்ந்து அமெரிக்கா மற்றும் கனடாவை தாக்கும் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் லீ சூறாவளி ஆனது வடக்கு நோக்கி திரும்பி தனது பாதியை மாற்றி பெரிதாக சீற்றம் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளைய தினம் இங்கிலாந்து கடற்கரையில் இதன் பாதிப்பானது பெரிய சூறாவளியாக உருமாற கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் லீ சூறாவளியானது தற்போது 110mph வேகத்தில் வீசுவதாக அமெரிக்காவின் சூறாவளி தேசிய மையம் தற்போது தெரிவித்துள்ளது.

கனடாவின் கடலோரப் பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு புயல் ஏற்படக்கூடும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கின்றது.

மேலும் கடலோரப் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் என முன்பே தயார் நிலையில் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சீற்றம் கொண்ட லீ சூறாவளியின் அடுத்த கட்ட நகர்வானது அடுத்த வார நாட்களிலேயே குறைவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் லீ சூறாவளியானது ஒரு பெரிய சேதத்தினை ஏற்படுத்த கூடும் எனவும் அறியப்பட்டுள்ளது.

அமெரிக்கா – லீ சூறாவளி சீற்றம்….

லீ சூறாவளி ஆனது அமெரிக்காவின் தெற்கு கடற்கரைப் பகுதியில் தற்போது ஆபத்தான நீரோட்டங்களை கொண்டதாக உருவாகி இருக்கின்றதாகவும் அமெரிக்காவின் தேசிய வானிலை சேவை மையம் தெரிவித்துள்ளது.

இந்த மாதம் முதல் வாரத்தில் உருவான லீ சூறாவலியானது அதிகமான மாநிலங்களை தாக்கக்கூடிய சக்தி கொண்ட சூறாவளியாக தற்போது எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த சூறாவளியின் காரணமாக மரங்கள் விழக்கூடிய அபாயம் இருப்பதாகவும், இதிலிருந்து தப்பிப்பதற்குரிய வழிமுறைகளை ஏற்கனவே தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறும் மக்களை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை அல்லது திங்கட்கிழமைகளில் சேதங்கள் அதிகமாக மாறலாம் எனவும் நிபுணர்கள் இதன் போது அறிவித்தனர்.

ஒவ்வொரு வருடமும் பருவகால மாற்றங்களின் மூலம் ஏற்படுகின்ற 12 வது புயலாக இது அமைகின்றது.

மேலும் ஜூன் மாதம் தொடக்கம் நவம்பர் மாதம் வரை புயல் ஆனது ஆட்கொள்ளும் எனவும் ஏனைய கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு சற்று அதிகமாக சூறாவளியினால் ஏற்படும் ஆபத்துக்கள் நிறைந்துள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த 40 ஆண்டுகளில் ஏற்றப்பட்ட ஆதி தீவிரமான சூறாவளிகளில் ஒன்றாக இதனை விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

மேலும் அதீத மழையுடன் உச்சம் கொண்டு தாக்க இருப்பதாகவும் மற்றும் தீவிரமானதாக இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கின்றனர்.

தற்போது நிலவி வாருகின்ற அதீத பருவ காலம் மாற்றங்களின் காரணமாக இயற்கை அழிவுகள் நாடுகெங்கிலும் சீற்றம் கொண்டுள்ளது .

இதனால் மக்கள் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

இயற்கை அழிவுகள் அதிகம் நிறைந்த இவ் வருடத்தில் அதிகமாக வெள்ளப்பெருக்கு, சூறாவளி, புயல் என்பன இரண்டு மூன்று மாதங்களாக உலகை உலுக்கி பல மரணங்களையும் ஏற்படுத்தி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தற்போது லீ சூறாவளியானது அமெரிக்கா மற்றும் கனடா நாட்டினை நோக்கி நகர்ந்து வருவதாகவும் அங்கு கடலோர பிரதேசங்களில் வாழ்கின்ற மக்கள் எப்போதும் தயார் நிலையில் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்குரிய ஆயத்தங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும் சூறாவளி கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button