விசா இன்றி ஆஸ்திரேலியா இல் இலங்கையர் செய்த செயல் …..
விசா இன்றி ஆஸ்திரேலியா இல் இலங்கையர் ஒருவர் சுமார் 8 வருட காலம் வசித்து வருகின்றார். இவர் பெயர் நீல் பாரா . இவர் செய்த செயல் இப்போது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது .
அப்படி என்ன செய்தார் இவர்???
தன்னை போல விசா இன்றி ஆஸ்திரேலியா இல் இலங்கையர் பலர் வசித்து வருகிறார்கள் . இதனால் அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெறாமல் அகதிகளாக வசித்து வரும் இல்லங்கையர்கள் மற்றும் ஏனைய நாட்டு மக்கள் சார்பாக அவர்களுக்கான உரிமை கோரி ,
மேலும் அவர்கள் படும் இன்னல்களை எடுத்து கூறியும் மனு ஒன்றினை சிட்னியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க சுமார் 1000கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் ஒன்றினை நேற்று ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி ஆரம்பத்துள்ளார் .
இதில் இவர் நாளொன்றுக்கு சுமார் 30கிலோ மீட்டர் தூரம் வரை நடப்பதற்கு உத்தேசித்துள்ளார் . மற்றும் செப்டம்பர் மாதம் 9ம் திகதி இதனை நிறைவு செய்து தனது கோரிக்கையை உரிய இடத்தில் செலுத்த உள்ளார் .
இவரது கோரிக்கையை அவுஸ்திரேலியா அரசாங்கம் ஏற்று கொள்ளுமா என்று பார்ப்போம் .