லண்டன் பொலிஸாரால் தேடப்படும் இளம் பெண்!! பெண் குறித்து பொலிஸார் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்!!
லண்டன் பொலிஸார் கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதி இடம் பெற்ற கார் விபத்தின் போது உயிரிழந்த 50 வயதுடைய நபர் ஒருவரின் உயிரிழப்பு தொடர்பான விசாரணையில் இப் பெண் தேடப்பட்டு வருகிறார்.
மேலும் இவர் விபத்தினை ஏற்படுத்தியவர் அல்ல என்பதும் பொலிஸாரினால் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்றும் இவர் விபத்து நடைபெற்ற இடத்தில் விபத்தினை நேரில் பார்த்ததாக இப் பெண்ணை பொலிஸார் அடையாளம் காணப்பட்டுள்ளதால் ,லண்டன் பொலிஸார் சமூக வலைத்தளங்களில் இப் பெண்ணின் புகைப்படத்தை இட்டு தற்போது விசாரணைக்காக பொது மக்களின் ஆதரவினை கேட்டு நிற்கின்றனர்.
அவ் விபத்திலே கருப்பு நிற பி எம் டபிள்யூ காரில் வந்த சந்தேக நபரே விபத்தினை ஏற்படுத்தி குறித்த 50 வயதுடைய நபரை கொன்று விட்டு சம்பவ இடத்திலிருந்து உடனடியாக வெளியேறி உள்ளார்.
இதனை அடுத்து குறித்த சாரதியானவர் இது வரை அடையாளம் காண முடியாத நிலையில், விபத்தினை நேரில் பார்த்த இப் பெண்ணை தற்போது தேடி வருகின்றனர் பொலிஸார் .
மேலும் இந்த விபத்தானது பார்க் ராயல், பாரெட்ஸ் கிரீன் ரோடு என்னும் லண்டனின் பகுதியில் குறித்த திகதி சுமார் அதிகாலை 3. 24 மணி அளவில் இடம் பெற்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.