Srilanka News

இலங்கையை அண்மித்து உருவாகும் காற்று சுழற்சிகள்…. இலங்கை மக்களுக்கு அறிவித்த காலநிலை ஆய்வாளர்கள்!!!

இலங்கையை அண்மித்து இலங்கைக்கு தெற்கு அந்தமான் கடல் பிராந்தியத்தில் தற்போது காணப்படுகின்ற காற்று சுழற்சியானது மேற்கு நோக்கி இலங்கையின் தெற்கு பகுதியின் ஊடாக நகர்ந்து வருவதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தற்போது தெரிவிக்கின்றனர்.

சில பகுதிகளில் இன்று முதல் இலங்கையில் மழை பெய்யக்கூடிய அபாயநிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அந்தமான் தீவுகளின் கடலில் உருவாகின்ற காற்று சுழற்சியானது எதிர்வரும் 14 ஆம் திகதி இலங்கையின் தெற்கு பகுதி ஊடாக நகர்ந்து அதனை தொடர்ந்து குமரி கடல் வழியாக மாலைத் தீவினை சென்றடையும் எனவும்,

அதனை தொடர்ந்து இந்தியாவின் கட்சத் தீவுக்கு இடைப்பட்ட பகுதியின் ஊடாக நகர்ந்து அரபிக் கடலை சென்றடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையை அண்மித்து

மீண்டும் இது போன்ற காற்று சுழற்சியானது இலங்கையை அண்மித்து எதிர்வரும் 18 மற்றும் 19ஆம் தேதிகளில் மீண்டும் நகரும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மற்றும் 21, 22, 23 ஆகிய திகதி அளவில் மன்னார் வளைகுடாவின் ஊடாக மீண்டுமாக அரபிக் கடலின் பிராந்தியத்தினுள் காற்று சுழற்சியானது நகர்வதற்கு வாய்ப்புள்ளதாகவும் தற்போது வானிலை அறிக்கையாளர்கள் தகவலினை வெளியிட்டுள்ளனர்.

இதன் காரணமாக இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள இடங்களுக்கு அதிகளவான மழை காணப்படும் என்றும் தற்போது அறிவுறுத்தி இருக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து இந்த வருட கிறிஸ்மஸ் பண்டிகையை தொடர்ந்து அடுத்த நாள் அந்தமான் கடல் பிராந்தியத்தின் தெற்கு வழியாக காற்று சுழற்சியானது வங்க கடலில் உருவாகும் எனவும்,

அது படிப்படியாக வலுவடைந்த நிலையில் எதிர்வரும் 26, 27 ஆம் தேதி அளவில் இலங்கையை நெருங்கி அதனுடாக இந்தியாவின் தமிழ்நாட்டை சென்றடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மற்றும் இது குறித்து இவ்வாறு குறிப்பிட்ட காலப்பகுதிகளில் இலங்கையில் மழை பெய்வதற்குரிய சாத்தியக் கூறுகள் அதிக அளவில் தென்படுவதாகவும் தற்போது தெரிய வந்துள்ளது.

எனவே கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது தொடர்பில் மிகக் கவனமாக நடந்து கொள்ளுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் இவ்வாறான காலப்பகுதிகளில் அதாவது அதிக காற்று சுழற்சியின் போது அவதானத்துடன் செயல்படுமாறும்,

மற்றும் கடலோர பிரதேசங்களில் வாழ்கின்ற மக்கள் இதுகுறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யக் கூறியும்,

மற்றும் மீனவர்கள் தகுந்த அனுமதி உடன் கடலுக்கு செல்லுமாறும் வளிமண்டலவியல் திணைக்களமானது தற்போது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Articles

Back to top button