Srilanka News

வெள்ளத்தில் மூழ்கும் கொழும்பின் முக்கிய பகுதிகள்…

இலங்கையின் பல பகுதிகளில் அதிகரித்து வருகின்ற மழையின் காரணமாக வெள்ளத்தில் பல்வேறு பகுதிகளில் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந் நிலையில் மழையின் காரணமாக வெள்ளத்தில் மூழ்கும் முக்கிய இடங்கள் கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

மேலும் சுமார் 20 இடங்களில் இப் பிரச்சினைக்கு உரிய தீர்வுகளுக்கான நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குடும்ப மாநகர ஆணையாளரான பத்ராணி ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதற்கென சுமார் 20 பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கப்படும் எனவும் அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்காக குறுகிய கால மற்றும் நடுத்தர மற்றும் நீண்ட காலம் என மூன்று அடிப்படைகளில் வேலை திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாநகர ஆணையாளர் அவர்கள் தெரிவித்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

தாழ்நிலை அபிவிருத்தி சபையுடன் கொழும்பு மாநகர ஆணையாளர் அவர்கள் உரையாடல் ஒன்றினை நடத்திய போது இது குறித்து பேசப்பட்டுள்ளதாகவும் மற்றும் இவ்வாறு வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வாழ்கின்ற மக்களை வெளியேற்றி அவர்களுக்கென புதிய வீடுகளை வழங்குவதற்கு எனவும் நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் கலந்துரையாடி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button