இலங்கைக்கான விசா கட்டணம் நீக்கம்….சுமார் ஐந்து நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருவோருக்கானவிசா கட்டணம் நீக்கம்…
இலங்கைக்கான விசா கட்டணம் ஆனது தற்போது நீக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கின்றது.
இந் நிலையில் சுற்றுலா பயணிகளின் இலங்கைக்கான விசா கட்டணமானது அறவிட வேண்டாம் என்ற நிபந்தனையை தற்போது இலங்கை அமைச்சரவையானது அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கை நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை இணை அதிகரிப்பதற்காகவே இவ் முடிவு எடுக்கப் பட்டுள்ளது .
இந் நிலையில் சீனா, ரஷ்யா, இந்தியா, தாய்லாந்து, மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகின்ற சுற்றுலா பயணிகளுக்கே விசா கட்டணம் நீக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது .
இச் செய்தியினை சுற்றுலா சபையின் தலைவர் அவர்கள் தெரிவித்து இருக்கின்றார். மேலும் இதன் படி இந்த வருடத்தில் சுமார் ஒரு லட்சத்து 11 ஆயிரம் 938 சுற்றுலா பயணிகள் இலங்கை நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
மேலும் இலங்கையின் வருவாய் இதன் மூலம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவே தற்போது இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.