Sports

2024ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் நீக்கப்பட்ட இலங்கையின் பிரபல வீரர்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…

வருடா வருடம் நடைபெறுகின்ற இந்தியாவின் பிரீமியர் லீக் இன் 2024ம் ஆண்டு ஏலத் தெரிவு பட்டியலில் தற்போது இலங்கை அணி இனை சேர்ந்த முன்னாள் இலங்கை அணியின் தலைவரும் பிரபல வீரருமான ஏஞ்சலோ மேத்யூஸ் அவர்கள் நீக்கப்பட்டுள்ள செய்தியானது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

மற்றும் ஏலத்தின் ஆரம்பத்தில் இவரது பெயர் முதல் பிரிவில் இடம் பெற்றிருந்த போதிலும் அதன் பின்னதாக ஊடகங்களுக்கு வெளியிடப்பட்ட ஏலத்தில் இடம்பெற உள்ள வீரர்களின் பட்டியலில் இவரது பெயர் நீக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் வீரர்களை தெரிவு செய்யும் ஏலமானது வருகின்ற 19ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

மற்றும் இலங்கை சேர்ந்த பலவீரர்கள் 2024ம் ஆண்டு ஐபிஎல் ஏலப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவ் வரிசையில் வனிது ஹசரங்க, குசல் மெண்டிஸ், டில்ஷான் மதுசங்க, சரித் அசங்க, தசுன் சானக, துஸ்மந்த சமிர, லஹிர குமார மற்றும் நுவன் துஷார ஆகியவர்கள் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இந்த சீசனில் மத்திஷ பத்திரனா மற்றும் மகேஷ் தீக்ஷனவை தொடர்ந்து தங்கள் அணியில் தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.

Back to top button