World

நாடாளுமன்றத்தில் பதற்ற நிலை!! குண்டுகளுடன் நுழைந்த இருவர்… நடந்தது என்ன??

இன்றைய தினம் இந்திய நாடாளுமன்றத்தில் பாதுகாப்பினை மீறி நாடாளுமன்றத்தினுள் நுழைந்த இரு நபர்களினால் நாடாளுமன்றத்தில் சிறிது நேரம் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தற்போது இந்திய ஊடகங்கள் செய்தியினை வெளியிட்டு இருக்கின்றது.

பார்வையாளர்களின் இருக்கையில் அமர்ந்திருந்த குறித்த இருவரும் திடீரென நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு வளையத்தினுள் நுழைந்து சர்வதிகாரம் ஒழிக என்று கோஷங்களை எழுப்பி உள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல்களினை வெளியிட்டுள்ளது.

இந் நிலையில் அவர்கள் இருவரும் வண்ணத்தை உமிழ்கின்ற கண்ணீர் புகையினை குண்டுகளை வைத்திருந்ததாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிவித்திருக்கின்றனர்.

மற்றும் அனுமதியின்றி நுழைந்த இரு நபர்களினால் அங்கு சற்று சலசலப்பு ஏற்பட்டது. மற்றும் அங்குள்ள உறுப்பினர்கள் வேகமாக புத்தி கூர்மையுடன் செயல்பட்டு இருவரையும் மடக்கி பிடித்து நாடாளுமன்ற காவலர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனால் நாடாளுமன்றத்தில் அசம்பாவித செயல்கள் ஒன்றும் இடம்பெறவில்லை என செய்திகள் கூறுகின்றது.

மற்றும் எவ்வித அனுமதியும் இன்றி இருவரும் பாதுகாப்பு வளையத்தை தாண்டி வந்ததன் காரணமாக சிறிது நேரம் பாராளுமன்ற சபையானது ஒத்துழைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

நாடாளுமன்றத்தில்

கடந்த 2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் தேதி அன்று இந்தியாவின் நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாதிகளினால் தாக்குதல் சம்பவம் இடம் பெற்று இருக்கின்றது.

இந் நிலையில் இன்றைய தினம் அதனை நினைவு கூறும் வகையில் அந்நினைவு நாள் அனுஷ்ட்டிக்கப்பட்டு வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது .

இந் நிலையிலே இச்சம்பவம் நாடாளுமன்றத்தில் இடம் பெற்றுள்ளதாகவும் இது குறித்து சற்று பதற்ற நிலை ஏற்பட்டதாகவும் செய்திகள் விவரிக்கின்றன.

மற்றும் நாடாளுமன்றத்தின் உள் பிரவேசிக்கின்ற பார்வையாளர்கள் அனைவரும் நன்கு சோதனை படுத்தப்பட்ட பின்னரே அனுப்பப்படுவார்கள்,

எனினும் இருவரும் எவ்வாறு கண்ணீர் புகை குண்டுகளை நாடாளுமன்றத்திற்குள் கொண்டு வந்தார்கள் என்பது சற்று அதிர்ச்சி ஏற்படுத்திய ஒன்றாக இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மற்றும் நாடாளுமன்ற தாக்குதல் தினத்தை அனுஷ்டிக்கின்ற தினத்திலேயே இச் சம்பவம் இடம்பெற்று இருக்கின்றமையினால் புதிய நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து எதிர்க்கட்சிகள் தற்போது கேள்விகளை எழுப்பி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு நாட்டின் பாதுகாப்பான இடமான நாடாளுமன்றதில் அனைத்து பாதுகாப்பையும் மீறி இருவர் உள்ளே சென்ற செய்தியானது நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

Related Articles

Back to top button