வங்காள விரிகுடாவில் உச்சம் பெற்ற மிக்ஜாம் சூறாவளி… அவசர தகவலினை வெளியிட்ட வளிமண்டலவியல் திணைக்களம்!!!
வங்காள விரிகுடாவில் தென்மேற்கு கடற் பகுதியில் ஏற்பட்டுள்ள சூறாவளி காரணமாக தற்போது அவசரத் தகவலினை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இலங்கையின் வடமாகாணமான யாழ்ப்பாணத்திலிருந்து வடகிழக்கு திசையை நோக்கி சுமார் 365 கிலோமீட்டர் வரையில் மிக்ஜாம் சூறாவளி ஆனது வலு பெற்றுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது .
இந் நிலையில் மிக்ஜாம் சூறாவளி ஆனது வலுப்பெற்ற நிலையில் வடமேற்கு நோக்கின் நகரும் என வளிமண்டலவியல் திணைக்களமானது தற்போது அறிவுறுத்து உள்ளது .
மற்றும் மிக்ஜாம் சூறாவளி ஆனது நாளைய தினம் வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து அதனை தொடர்ந்து வடக்கு நோக்கி தெற்கு ஆந்திரா வரை செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கையின் வடமேற்கு மாகாணங்களில் உள்ள இடங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றும் குறிப்பிட்ட பகுதிகள் தவிர ஏனைய பகுதிகளில் ஒரு மணிக்கு பின்னதாக இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரியவந்துள்ளது.
குறித்த சூறாவளியினால் ஏற்படக்கூடிய இடியுடன் கூடிய மழையின் காரணமாக முன்பாகவே இது குறித்தான தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளில் இருந்து மக்களை பாதுகாத்துக் கொள்ளக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டவியல் திணைக்களமானது தற்போது மக்களுக்கு விசேட அறிவித்தல் இனை வெளியிட்டு உள்ளது.
பருவ கால மாற்றங்களின் காரணமாக ஏற்படுகின்ற தாழமுக்கமானது சூறாவளியாக உரு பெற்று அவ்வப்போது இலங்கையையும் சேர்த்து பாதிக்கின்ற சம்பவங்கள் வருடா வருடம் இடம்பெற்று கொண்டுதான் இருக்கின்றது.
இந் நிலையில் இலங்கையின் அண்டை நாடான தமிழகத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையானது தமிழக அரசினால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து பல இடங்களுக்குரிய போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் சூறாவளியின் காரணமாக அதீத காற்று வீசி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் மின்சார தடையும் செய்யப்பட்டுள்ளதாக தமிழகத்தின் செய்தி ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டு உள்ளது.
வருடா வருடம் இவ்வாறு வங்காள விரிகுடாவில் ஏற்படுகின்ற தாழமுக்கம் காரணமாக உருவாகின்ற சூறாளியினால் இலங்கை மற்றும் இந்தியாவின் தமிழகம் ஆகிய பகுதிகளில் பாரியளவான சேதங்கள் ஏற்படுவது வழமையான ஒன்றாகும்.
இதற்கென வளிமண்டவியல் திணைக்களமானது இது குறித்து ஏற்கனவே எச்சரிக்கை வெளியிட்டு இது குறித்து சற்று எச்சரிக்கையாக இருக்குமாறு மக்களுக்கு வருடா வருடம் அறிவித்து வருகின்றதும் குறிப்பிடத்தக்கது.
எனவே சூறாவளி இனால் ஏற்படும் விளைவுகளிலிருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டி முன் எச்சரிக்கை நடவடிக்கைகளான மின்சாரம் தடங்கல் தொடர்பான முன்காப்பு வழிமுறைகள் மற்றும் உலர் உணவு வகைகளை அதிகம் சேர்த்து வைத்தல் போன்ற நடவடிக்கைகளை ஏற்கனவே செய்து வைத்தல் வேண்டும்.