Srilanka News

இலங்கையில் அரச வேலை வாய்ப்புக்காக எதிர்பார்த்து காத்திருப்போருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…..

இலங்கையில் அரச வேலை வாய்ப்பினை பெற்றுக் கொள்வதற்காக பலர் தற்போது காத்திருப்பு பட்டியலில் காத்திருக்கின்றனர்.

இந் நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு கோரப்பட்டுள்ள கிராம அலுவலர் பரீட்சை குரிய பரிட்சைகள் இந்த ஆண்டு சுமார் இரண்டு வருடங்கள் கழித்து 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி பரீட்சை திணைக்களத்தினால் நடத்தப்பட உள்ளது.

குறித்து கிராம அலுவலக பதவிற்குரியப் போட்டி பரீட்சையில் தகுதியான பரீட்ச்சாத்திகளில் இருந்து சுமார் 2238 கிராம சேவையாளர்கள் உள்வாங்கப்பட உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த தகவலினை வெண்ணபுவ பிரதேசத்தில் இடம் பெற்ற நிகழ்வொன்றிலே இலங்கையின் உள்நாட்டு அலுவலகங்களுக்கான ராஜாங்க அமைச்சரான அசோக பிரியந்த அவர்கள் தெரிவித்து இருக்கின்றார்.

மற்றும் குறித்த பதவிக்குரிய வெற்றிடங்களானது அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் நான்காம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டு இருக்கின்றார்

Related Articles

Back to top button