Srilanka News

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண் சரிவு அபாய எச்சரிக்கை!!!

இலங்கை மக்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊடாக மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்து.

மேலும் நேற்று இரவு முதல் சுமார் 24 மணித்தியாலத்திற்குள் பல பிரதேசங்களுக்கான முதல் கட்ட அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந் நிலையில் பதுளை மாவட்டத்தின் எல்லப்பிரதேசம் கண்டி மாவட்டத்தின் ஒரு சில பகுதிக்கும் மற்றும் கேகாலை மாவட்டத்தின் ரம்புகண்ண மற்றும் வரக்காப்பெல ஆகிய பகுதிகளுக்கும் மண் சரிவு அபாய எச்சரிக்கை தற்போது விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாக இருக்கின்றது.

இதனை அடுத்து குருநாகல் மாவட்டத்தின் ரிதிகாம ஆகிய பகுதிகளுக்கும் இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டிலே ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாகவே நாட்டின் பல பகுதிகளிலும் இவ் மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாக இருக்கின்றது.

எனவே குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ள இவ் மண் சரிவு குறித்து முன் முன் ஆயத்தங்களுடன் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி புலம்பெயருமாறும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தற்போது மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றிணையும் விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button