World

2023 ஆம் ஆண்டு மிகப்பெரிய சூரிய கிரகணம் நாளை.. பார்வையிடும் நேரம் குறித்து வெளியான தகவல்..

நாளைய தினம் 2023 ஆம் ஆண்டிற்கான மிகப்பெரிய சூரிய கிரகணமானது நிகழ இருப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தற்போது தகவலினை வெளியிட்டு இருக்கின்றனர்.

இவ்வாறு சூரியனின் பெருமளவு பரப்பில் சுமார் 50 சதவீதமான பகுதியை உள்ளடக்கி இச் சூரிய கிரகணம் நிகழ இருப்பதாகவும் தெரிய வருகின்றது.

2023 ஆம் ஆண்டிற்கான மிகப்பெரிய சூரிய கிரகத்தினை நாளை காலை 11. 46 மணிக்கு மற்றும் 1.07 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் பார்க்க முடியும் எனவும் அதன் பின்னர் படிப்படியாக குறைக்கப்படும் எனவும் கூறப்பட்டிருக்கின்றது.

மேலும் ஆண்டின் மிகப்பெரிய சூரிய கிரகணம் என்பதினால் இச் சூரிய கிரகணம் ஆனது வளைய கிரகணம் அல்லது நெருப்பு கிரகணம் என அழைக்கப்படுகிறது.

மற்றும் சில பகுதிகளில் சந்திரன் சூரியனை மேலும் மேலும் மறைக்க தொடங்கும் போது மரங்களின் கீழ் நிலங்கள் மாறுவதையும் காணக்கூடியதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கிரகணத்தின் போது இருள் சுவரானது மணிக்கு ஆயிரம் மயில் வேகத்தில் நம்மை நோக்கி வருவதாக உணர வைக்கும் எனவும் கூறப்படுகின்றது.

மேலும் இக் கிரகணத்தினை சாதாரண வெற்று கண்களாலும் மற்றும் சன் கிளாஸ்கள் அணிந்தும் பார்ப்பது மிகவும் ஆபத்தானது எனவும் கூறப்படுகிறது.

மேலும் கதிர்வீச்சின் தாக்கம் உயர்ந்த அளவில் இருப்பதினால் முறையான பாதுகாப்பு முறைகளை கையாண்டு இச் சூரிய கிரகணத்தை பார்வையிட வேண்டும் என பொதுமக்களுக்கு வானிலை ஆராய்ச்சியாளர்கள் தற்போது தெரிவித்து இருக்கின்றனர்.

Related Articles

Back to top button