இலங்கையில் தொடர்ந்து உயிரச்சுறுத்தல்கள் வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்…
இலங்கையில் தொடர்ந்து உயிரச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன. இந் நிலையில் தற்போது நிதியமைச்சின் செயலாளர் மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் உயிரச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதான செய்திகள் வெளியாகி உள்ளன .
இச் செய்தியானது தற்போது இலங்கையில் தீயாக பரவி வருகின்றது .
இந் நிலையில் இலங்கையில் தொடர்ந்து திரைக்கு பின்னால் நடக்கின்ற விடையங்களை தொடர்ந்து ஆராய்ந்து பார்க்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரான ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இவ் அச்சுறுத்தல்களை உற்று நோக்கும் போது இலங்கையின் நிதி அமைச்சரின் செயலாளர் தற்போது தனது குடும்பத்திற்கும் மற்றும் தனக்கும் உயிர் அச்சுறுத்தல்கள் இருப்பதாக தெரிவித்து இருக்கின்றார்.
மேலும் குறித்த உயிர் அச்சுறுத்தல்கள் தொடர்பாக தான் பாதுகாப்பு அமைச்சருக்கு தகவலினை அறிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கின்றார்.
மேலும் இவ்வாறு அச்சுறுத்தல்கள் தொடர்பில் நிதி அமைச்சர் செயலாளரே கூறுகின்றார் எனவும் இதனை வேறு யாரும் கூறவில்லை எனவும் மற்றும் இது குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது .
எனவே இவ்வாறான விடயங்களை உற்று கவனித்து இவ்வாறான அச்சுறுத்தல் நடவடிக்கைகள் ஈடுபடுகின்றவர்களை இனம் கண்டு அவர்களின் பின் புலங்களில் செயற்படும் நபர்களை அறிய வேண்டும் எனவும் பல தரப்பினரும் தற்போது குறிப்பிட்டு வருகின்றனர்.
முல்லைத்தீவு நீதிபதியான சரவணன் ராஜா அவர்களுக்கு இடம் பெற்ற உயிர் அச்சுறுத்தலினை தொடர்ந்து இலங்கை நாட்டை விட்டு வெளியேறியதை குறித்து பல்வேறு விதமான செய்திகள் வெளியான நிலையில் தற்போது நிதி அமைச்சரின் செயலாளரிற்க்கும் அவ்வாறு உயிர் அச்சுறுத்தல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதினை அடுத்து குறிப்பிட்ட சம்பவமானது பல்வேறு விதமான கோணங்களில் சிந்திக்க வைக்கின்றது.
இவ்வாறு பலரும் இலங்கையில் உயிர் அச்சுறுத்தல்களுக்கு இடையில் வாழ்ந்து வருவதாக அறியக்கூடியதாக இருகின்றது. எனவே இது குறித்து சற்று உன்னிப்பாகவும் மற்றும் அவதானத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என தெரியவருகின்றது.