World

பிரான்சில் தீ விபத்து 11 பேர் பலி!!

கிழக்கு பிரான்சில் மாற்று திறனாளிகள் தங்கியிருந்த விடுமுறை விடுதியில் தீப்பிடித்ததில் இது வரை 11 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

புதன்கிழமை நேற்று 09.08.2023 அன்று பிரான்ஸ்நேரப்படி 06:30 மணிக்கு அவசர சேவைகள் தகவல் வந்ததை அடுத்து , லா ஃபோர்ஜில் தீயை அணைக்க கிட்டத்தட்ட 80 தீயணைப்பு வீரர்கள் இவ் இடத்திற்க்கு அனுப்பப்பட்டனர்.

தீ உடனடியாக அணைக்கப்படடாலும் தீப் பரவலுக்கான , காரணம் இன்னும்சரியாக தெரிவிக்கப்படவில்லை.

கட்டிடத்தில் இருந்துகிட்டத்தட்ட 17 பேர் வெளியேற்றப்பட்டனர், அதில் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை நினைத்து வருந்துவதாகவும் மற்றும்

தீயை அணைக்க சரியான நேரத்தில் உதவிய தீயணைப்பு வீரரர்களுக்கு அவர்களின் சேவையை குறிப்பிடு நன்றியும் தெரிவித்து இருந்தார் .

ஆரம்பத்தில், ஒன்பது பேர் இறந்ததை உறுதிப்படுத்தினர், அதே நேரத்தில் காணாமல் போன இரண்டு பேரின் உடல்களைத் தேடும் பணி தொடர்ந்தது.

பிற்பகலில், கொல்மரின் துணை வழக்கறிஞர் நத்தலி கீல்வாசர் இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளதாக உறுதிப்படுத்தினார்.

பிரான்சில் ஏற்றப்பட் ட தீ விபத்து பற்றிய மேலதிக தகவல்…


இவ் விபத்தானது குறித்த விடுதியில் இரண்டாவது மாடியில் நடந்தது ஆகவும் தெரியவந்தது . மற்றும்இரண்டாவது மாடியில் உள்ளவர்கள் தப்பிப்பது கடினம், அங்குதான் இறந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஜேர்மன் எல்லைக்கு அருகாமையில் மற்றும் ஸ்ட்ராஸ்பர்க் நகருக்கு தெற்கே 70கிமீ (50 மைல்) தொலைவில் உள்ள Wintzenheim அருகே இவ் தீ விபத்து ஏற்பட்டது.

முந்தைய அறிக்கையில், ஒரு குழு கிழக்கு பிரான்சில் உள்ள நான்சியிலிருந்து வந்ததாகக் கூறியது.

தீயை அணைக்க நான்கு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 76 தீயணைப்பு வீரர்கள் அனுப்பப்பட்டனர். தீயின் பரவல் அதிகமாக இருந்த போதும் தீயணைப்பு வீரர்களால் அது விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

கட்டிடம் ஒரு பழைய களஞ்சியமாக ஆரம்பத்தில் இருந்தாலும் தற்போது இது மூன்று மாடி விடுமுறை இல்லமாக காணப்பட்டது இத் தீயினை கட்டுப்பாட்டிட்குள் கொண்டு வருவதற்குள் கட்டிடத்தின் மூன்றில் இரண்டு பங்கு தீப்பிடித்து எரிந்ததாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

எரிந்த கட்டிடத்தின் இடிபாடுகளை ஆய்வு செய்ய ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன, அதே நேரத்தில் தேடுதல் முயற்சியில் நாய்களும் பயன்படுத்தப்பட்டன.

பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் சம்பவ இடத்தை பார்வையிட்டு மீட்பு பணியாளர்களிடம் பேசினார்.

Ms Borne இது ஒரு மிகவும் ஆபத்தான விபத்து என்றும் மேலும் இச் சம்பவம் குறித்து இரங்களையும் வெளிப்படுத்தி இருந்தார் .

Related Articles

Back to top button