Srilanka News

மன்னார் மாவட்டத்தில் புதிய அரச அதிபர்… பதவியேற்றபு நிகழ்வு ….

மன்னார் மாவட்டத்தில் புதிய அரசாங்க அதிபராக இது வரை காலமும் பணியாற்றிய திருமதி ஸ்டாலின் டிமல் அவர்களை தொடர்ந்து தற்போது புதிய அரசாங்க அதிபராக க. கனகேஸ்வரன் என்பவர் இன்றைய தினம் தனது கடமை பொறுப்பினை ஏற்றுள்ளார் .

இந் நிகழ்வானது மன்னர் மாவட்டத்தின் மாவட்ட செயலக மண்டபத்தில் இடம் பெற்றுள்ளது.

மன்னர் மாவட்டத்தில் குறிப்பிட்ட பதவிக்கென நீண்ட காலமாக தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில் இன்றைய தினம் இவர் கடமை பொறுப்பை ஏற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்றும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஆக இவர் முன்னர் கடமை புரிந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பதவி ஏற்ற பின்னார் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மன்னார் மாவட்டத்தில் காணப்படுகின்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வினை பெற்று தருவதாகவும் அதிலும் முக்கியமாக காணி விடுவிப்பு மற்றும் மணல் அகழ்வு, சுற்றுச்சூழல் பிரச்சனைகள், முறையாக கழிவுகளை அகற்றல் ஆகிய செயற்பாடுகளை அதிகம் உற்று நோக்கி அதற்குரிய அபிவிருத்தி விடயங்களை துரிதப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை அவரது பதவி காலங்களில் செய்வதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கின்றார்.

மற்றும் குறித்த பதவியேற்பு நிகழ்வானது முன்னாள் அரசாங்க அதிபரான திருமதி ஸ்டாலின் டிமல் அவர்களும் அதனை தொடர்ந்து உதவி அரசாங்க அதிபரும் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலர்கள் உட்பட மத தலைவர்களும் திணைக்களத் தலைவர்களும் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்துக் கொண்டுள்ள அமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button